Home முக்கியச் செய்திகள் குறைக்கப்படவுள்ள குடிநீர் கட்டணம் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

குறைக்கப்படவுள்ள குடிநீர் கட்டணம் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

0

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள குடிநீர் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை (Sri Lanka Cabinet) அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஜூலை 16ஆம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், எரிபொருள், இரசாயன பொருட்கள், வட்டி செலவுகள் போன்றவற்றின் விலை குறைப்பை கருத்தில் கொண்டு இந்த குடிநீர் கட்டண திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நீர் கட்டணத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

பந்துல குணவர்தன தெரிவிப்பு 

அதன்படி, வீட்டு பாவனைக்கான குடி நீர் கட்டணத்தை 7 சதவீதத்தாலும், அரசு மருத்துவமனைகளுக்கான குடி நீர் கட்டணத்தை 4.5 சதவீதத்தாலும், பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கான குடி நீர் கட்டணத்தை 6.3 சதவீதத்தாலும் குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version