Home இலங்கை சமூகம் நீர் கட்டணத்திற்கு விலை மீளாய்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நீர் கட்டணத்திற்கு விலை மீளாய்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

0

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் புதிய கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரம் குறித்து கடந்த 08.04.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருந்தது.

தேவையான திருத்தங்கள்

அங்கு அனைத்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான திருத்தங்களைச் செய்து புதிய கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை முன்வைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் 2025 ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட நீர் கட்டண கொள்கை மற்றும் நீர் கட்டண சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version