Home இலங்கை சமூகம் மன்னாரில் இலத்திரனியல் வகுப்பறைகளை திறந்து வைத்த எதிர்க்கட்சித் தலைவர்

மன்னாரில் இலத்திரனியல் வகுப்பறைகளை திறந்து வைத்த எதிர்க்கட்சித் தலைவர்

0

மன்னாரில் தெரிவு
செய்யப்பட்ட கருங்கண்டல் பாடசாலைக்கான இலத்திரனியல் மூல வகுப்பறைகளை (SMART CLASS
ROOM) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வானது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதனின் (Selvam Adaikalanathan) ஏற்பாட்டில் இன்றைய தினம் (15)  காலை
இடம்பெற்றுள்ளது.

இலத்திரனியல் வகுப்பறை

இதன் போது, மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கருங்கண்டல் பாடசாலையில்
அமைக்கப்பட்ட குறித்த இலத்திரனியல் மூல வகுப்பறை (SMART CLASS ROOM) வைபவ
ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக
கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பாடசாலைகளின் நூலகங்களுக்கு தேவையான ஒரு தொகுதி ஆங்கில
புத்தகங்கள் மேற்படி வழங்கி வைத்ததோடு,புதிய நூல்கள் கொள்வனவு செய்ய தலா ஒரு
இலட்சம் ரூபாய் நிதியும் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version