ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்மொழியப்பட்ட இலங்கை தினத்தை நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது தொடர்பான அறிவிப்பை இன்றையதினம் (22.10.2025) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் இதனை ஏற்கனவே முன்மொழிந்திருந்தார்.
1,000 கோடி ரூபா நிதி
சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை வளர்ப்பதன் மூலம் இணக்கமான இலங்கையை உருவாக்கும் நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக 1,000 கோடி ரூபா நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
