Home இலங்கை அரசியல் அமைச்சர்கள் மற்றும் அரச எம்பிக்களுக்கு வழங்கப்படப்போகும் வாகனம் எவை தெரியுமா…!

அமைச்சர்கள் மற்றும் அரச எம்பிக்களுக்கு வழங்கப்படப்போகும் வாகனம் எவை தெரியுமா…!

0

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்துவார்கள், மற்ற அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ “சொகுசு அல்லாத, எரிபொருள் திறன் கொண்ட” வாகனம் வழங்கப்படும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் கொழும்பு(colombo) ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

அதாவது, அனைத்து 159 அரசாங்க எம்.பி.க்களும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு அதிகாரபூர்வ வாகனம் வழங்கப்படும்.

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இந்த அமைச்சுக்களை மேற்பார்வையிட்ட முன்னைய அமைச்சர்களுக்கு அந்தந்த அமைச்சுகளால் ஒதுக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.

புதிய வாகனங்கள் வழங்கப்படாது

“அவர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படாது, ஆனால் அவர்களின் முன்னோடிகளால் பயன்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள் வழங்கப்படும் ” என்று அவர் மேலும் கூறினார்.

மற்ற அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ வாகனம் வழங்கும் நடவடிக்கையை அந்த அதிகாரி ஆதரித்தார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க நடவடிக்கைகளுக்காக கொழும்பிற்கு மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு அதிக அளவில் பயணம் செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த எம்.பி.க்கள் எவருக்கும் “வி8 வகை சொகுசு வாகனங்கள்” வழங்கப்படாது என்று அந்த அதிகாரி கூறினார்

ஏலம் விட்டு கிடைக்கும் பணத்தில் வாங்கப்படவுள்ள வாகனங்கள்

“பராமரிப்பது கடினம்” என்று 344 அரசு வாகனங்களை அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

V8s போன்ற சொகுசு வாகனங்கள், விரிவான மற்றும் விலையுயர்ந்த பழுதுபார்ப்பு தேவைப்படும் வாகனங்கள் மற்றும் அரசு பராமரிப்பதற்கு மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படும் வாகனங்கள் ஆகியவை இவற்றுள் அடங்கும்.

இதன்படி, இந்த வாகனங்களை பகிரங்கமாக ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை அமைச்சர்களாக இல்லாத அரசாங்க எம்.பி.க்களுக்கு வாகனங்களை வாங்குவதற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்க எம்.பி.க்களுக்கு வாகனங்களை ஒதுக்கும் போது முதன்மையான தேவை எரிபொருள் சிக்கனமாகும், மேலும் எரிபொருளை உறிஞ்சும் சொகுசு வாகனங்கள் யாருக்காகவும் வாங்கப்படாது என்று அதிகாரி கூறினார்.

தற்போதுள்ள வாகனங்களை ஏலம் விடுவதன் மூலம் பெறப்படும் நிதி போதுமானதாக இல்லாத நிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சில வாகனங்களை ஜனாதிபதி செயலகத்தில் இருந்த விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version