Home இலங்கை அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் கிழக்கு தமிழருக்கு கேபினட் அமைச்சு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் கிழக்கு தமிழருக்கு கேபினட் அமைச்சு

0

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் கிழக்கின் தமிழ் அரசியல்வாதியொருவருக்கு கேபினட் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எஸ்.கணேசமூர்த்தி இதனை அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தியின் கல்லடி இல்லத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பான தகவலை அவர் வௌியிட்டுள்ளார்.

கிழக்கின் தமிழ் அரசியல்வாதி ஒருவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிப்பதில் சஜித் பிரேமதாச விருப்பம் கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version