எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புதியவர்களுக்கு பதவி
தாம் உள்ளிட்ட அமைச்சர்களின் பொறுப்புக்களை மாற்றியமைக்குமாறு கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் புதியவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
