Home இலங்கை அரசியல் அர்ச்சுனா எம்.பியின் சர்ச்சையை ஏற்படுத்திய செயல் – கேள்வி எழுப்பிய கபே அமைப்பு

அர்ச்சுனா எம்.பியின் சர்ச்சையை ஏற்படுத்திய செயல் – கேள்வி எழுப்பிய கபே அமைப்பு

0

நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைவாக உறுப்பினர்கள் நடந்து கொள்வது இன்றியமையாதது என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (Caffe) தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்விக்குரிய வகையில் நடந்து கொள்வதற்காக மக்கள் உறுப்பினர்களை தெரிவு செய்வதில்லை எனவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ். மாவட்டத்தில் இருந்து சுயேச்சைக் குழுவின் கீழ் இவ்வருடம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna), முதல் நாளிலேயே சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காணொளிகளை சமூக வலைதளங்கள்

அதற்கு அவர் பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து பல்வேறு காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதுதான் காரணம் என குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இராமநாதன் அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய உறுப்பினர்கள் நடந்து கொள்வது இன்றியமையாதது என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, “10ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய எம்.பி.க்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நவம்பர் 25 முதல் 27 வரை நடைபெற உள்ளது.

NO COMMENTS

Exit mobile version