Home உலகம் லெபனானிலிருந்து தமது பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்ற கனடா முயற்சி

லெபனானிலிருந்து தமது பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்ற கனடா முயற்சி

0

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்களினால் லெபனானில் இருந்து தமது நாட்டுப் பிரஜைகள் வெளியேறுவதற்கு உதவிகளை வழங்கி வருவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில், கனேடிய அரசாங்கம் விமானங்களில் ஆசனங்களை முன்பதிவு செய்து தமது பிரஜைகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதன்போது, லெபனானில் தங்கியுள்ள கனேடியர்கள் இவ்வாறு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேடியர்களின் பாதுகாப்பு

அத்துடன், லெபனானில் தங்கியுள்ள கனேடியர்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கனேடியர்கள் மற்றும் கனடிய நிரந்தர வதிவிட உரிமையாளர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

மேலும், லெபனானில் 45,000 கனேடியர்கள் வசிக்க கூடும் எனவும் அவர்களில் 25 ஆயிரம் பேர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் கனேடிய வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version