Home இலங்கை அரசியல் சசிகலாவுக்கு நேர்ந்த கதி: வேட்பாளர் தெரிவில் அம்பலமான சுமந்திரனின் சூழ்ச்சி!

சசிகலாவுக்கு நேர்ந்த கதி: வேட்பாளர் தெரிவில் அம்பலமான சுமந்திரனின் சூழ்ச்சி!

0

நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து அரசியல் ரீதியான முரண்களை சந்தித்துக்கொண்டிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியானது, நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடுகளிலும் பெரும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

கட்சியின் சிரேஷ்ட தலைமைகளுக்கு இடையில் காணப்படுகின்ற கருத்து வேறுபாடுகளும், நிலைப்பாடுகளும் தமிழரசுக் கட்சியை இன்று விமர்சனங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.

பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் வடக்கு – கிழக்கில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இறுதி முடிவின் பின்னர் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் பதவி விலகியுள்ளார்.

கட்சிக்குள் இருக்கும் உட்பூசல்களே இதற்கு காரணம் என கருத்துக்கள் அடுக்கப்பட்டாலும், தற்போதைய அக்கட்சியின் பேச்சாளரான எம். ஏ சுமந்திரனின் காய்நகர்தல்களே இவ்வாறான பிளவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

சுமந்திரனின் முடிவுகளில் நாட்டம் இல்லாத முன்னணி உறுப்பினர்கள் தற்போது கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதில் முக்கிய வெளியேற்றமாக ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசாவின் வெளியேற்றமும், முன்னாள் கட்சி தலைவரான மாவை சேனாதிராஜாவின் வெளியேற்றமும் விமர்சனங்களை சுமந்துள்ளது.

இது தொடர்பில் ஆராயும் நோக்கோடு தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசாவுடன் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி நேர்காணலொன்றை முன்னெடுத்தது.

இதில் கலந்துகொண்ட அவர், தமிழரசுக் கட்சியில் காணப்படும் முரண்களையும் பக்கசார்பான செயற்பாடுகளையும் ஆதங்கங்களாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் குறிப்பாக, 2020 ஆண்டு இடமாற்ற நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பெண் பிரதிநிதியான சசிகலா ரவிராஜ் 24000 வாக்குகளை தமிழரசுக்கட்சியின் சார்பில் பெற்றிருந்த போதும் அவருக்கான இடம் கட்சியில் ஒதுக்கப்படாமை பின்னடைவான போக்கை எடுத்துக்காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனக்கான முகவர்களை வைத்து அரசியலை நகர்த்த நினைக்கும் எம். ஏ சுமந்திரன் ஒதுக்கப்படவேண்டியவர்களை ஒதுக்கி சசிக்கலா போன்றோரை வெளியேற்றியமை அவரின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் லங்காஸ்ரீயின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கே. வி தவராசா தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version