Home உலகம் நாங்கள் முதுகெலும்புடையவா்கள் ஒருபோதும் அது நடக்காது : ட்ரம்பிற்கு மற்றொரு பதிலடி

நாங்கள் முதுகெலும்புடையவா்கள் ஒருபோதும் அது நடக்காது : ட்ரம்பிற்கு மற்றொரு பதிலடி

0

அடக்குமுறைக்கு எதிராகக் குரலெழுப்புவதில் நாங்கள் முதுகெலும்புடையவா்கள். எனவே ‘கனடா (canada)ஒருபோதும் அமெரிக்க(us) மாகாணமாகாது’ என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஜீன் கிரெட்டியன் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்பிற்கு(trump) பதிலடி கொடுத்துள்ளார்.

1993 முதல் 2003 வரை கனடா பிரதமராகப் பதவி வகித்த ஜீன் கிரெயட்டியன், தனது 91-ஆவது பிறந்த நாளையொட்டி ‘தி குளோப் அண்ட் மெயில்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

உங்கள் திட்டம் கனடாவில் ஒருபோதும் ஈடேறாது

‘உலகில் சிறந்த நாடான கனடாவை விட்டுவிட்டு எங்கள் நாட்டு குடிமக்கள் அமெரிக்காவுடன் இணைவாா்கள் என உங்களால் (டிரம்ப்) எவ்வாறு எண்ண முடிந்தது.

கனடா மட்டுமன்றி பிற ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவுடன் இணைத்து அதை விரிவாக்க நினைக்கிறீா்கள். இந்த விவகாரத்தில் மற்ற நாடுகள் அமைதி காக்கலாம். ஆனால், உங்கள் திட்டம் கனடாவில் ஒருபோதும் ஈடேறாது.

நாங்கள் முதுகெலும்புடையவா்கள்

எங்களை அச்சுறுத்தி, அவமதிப்பதால் வெற்றி பெற்றுவிடலாம் என நீங்கள் நினைப்பது, உங்களின் விழிப்புணா்வற்ற நிலையை வெளிக்காட்டுகிறது.

நாங்கள் பழகுவதற்கு இனிமையானவா்களாக, எளிதாக அணுகக்கூடியவா்களாக தெரியலாம். ஆனால், அடக்குமுறைக்கு எதிராகக் குரலெழுப்புவதில் நாங்கள் முதுகெலும்புடையவா்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவுடன் கனடா இணைவதற்கு வாய்ப்பே இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

Source: https://ibctamil.com/article/canada-will-never-be-a-us-province-1736778673

NO COMMENTS

Exit mobile version