Home உலகம் முறிந்தது உறவு..! ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த கனடா பிரதமர்

முறிந்தது உறவு..! ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த கனடா பிரதமர்

0

அமெரிக்காவுடனான (USA) பழைய உறவு முடிந்து விட்டதாக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா (Canada) தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார்.

லிபரல் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து இன்று (29.04.2025) ஒட்டாவாவில் ஆதரவாளர்களுடன் பேசிய போதே மார்க் கார்னி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எங்களை சிதைக்கப் பார்க்கின்றார்

அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப் பார்க்கின்றார். அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என கருதுகின்றார் இது ஒருபோதும் நடக்காது என மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டது. அமெரிக்கா செய்த துரோகத்தின் அதிர்ச்சியில் இருந்து நாம் மீண்டு விட்டோம்.

ஆனால், நாம் கற்றுக் கொண்ட பாடங்களை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நாம் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இந்த வர்த்தகப் போரில் நாம் வெற்றி பெறுவோம். அமெரிக்கா நம்மை சொந்தமாக்கிக் கொள்வதற்காக நம்மை பிளவுபடுத்த ட்ரம்ப் முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/R5hVtJju8FA

NO COMMENTS

Exit mobile version