Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்றங்களை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும் : சிறீதரன் சூளுரை

உள்ளூராட்சி மன்றங்களை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும் : சிறீதரன் சூளுரை

0

 உள்ளூராட்சி மன்றங்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட அக்கராயன் வட்டாரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கூட்டமொன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தளத்தின் அடிப்படை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியற் தளத்தின் அடிப்படை அலகுகளாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வென்றெடுப்பதன் மூலமே எமது மக்களின் அடிப்படை வாழ்வியலையும் அது சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளையும் கட்டமைக்க முடியும்.  

அத்தகைய சமூகமயப்பட்ட அரசியலுக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய உள்ளூராட்சி மன்றங்களை இம்முறையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றுவதற்கான ஆணையை எமது மக்கள் வழங்குவார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version