Home இலங்கை அரசியல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கனடா தூதுவர்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கனடா தூதுவர்

0

இலங்கைக்கான (Sri Lanka) கனடா (Canada) உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும் தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலே் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று (22) புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்ஸ்தாணிகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் மக்களின் சமகால அரசியல் விவகாரம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் விவகாரம் 

அத்தோடு, கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி (Gary Anandasangaree) யாழிற்கு (Jaffna) அண்மையில் விஜயம் செய்திருந்தார்.

கனடாவின் முதலாவது ஈழத்தமிழ் அரசியல்வாதியாகவும் மற்றும் கனடிய நாடாளுமன்றத்தில் இரண்டாவது ஈழத்தமிழ் அமைச்சராகவும் காணப்படுகின்ற ஹரி ஆனந்த சங்கரியின் குறித்த இலங்கை விஜயம் முக்கியமான விடயமாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version