இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ் (Eric Walsh), கிளிநொச்சியில் அமைந்துள்ள றீச்சா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணைக்கு வருகை தந்துள்ளார்.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா(Reecha) ஒருங்கிணைந்த பண்ணை பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது.
சிறப்பான வரவேற்பு
அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடனும் இந்த ஒருங்கிணைந்த பண்ணை அமைந்துள்ளது.
அந்தவகையில், றீச்சாவிற்கு வருகை தந்த இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
