இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் (Eric
Walsh) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் இன்றையதினம்(15.10.2024) மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மாவட்ட
வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
மக்கள் எதிர்நோக்கும் சவால்கள்
அத்துடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும்
திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும்
பல்வேறு சவால்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில்
காணப்படும் பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்ட
அரசாங்க அதிபரினால் கனடா உயர்ஸ்தானிகருக்கு விபரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் மாவட்ட தொழித்துறை அமைப்புப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
Source: https://ibctamil.com/article/canadian-high-commissioner-visited-mullaitivu-1729007418
