Home முக்கியச் செய்திகள் கனடாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கனடாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா (Canada) பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

52 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபரிடமிருந்து 5 கிலோகிராம் கொக்கேய்ன் மற்றும் 12 கிலோகிராம் ஹஷீஷ் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்தப் போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 400 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version