Home இலங்கை சமூகம் மறு அறிவித்தல் வரை விடுமுறை இரத்து: வெளியான அறிவிப்பு

மறு அறிவித்தல் வரை விடுமுறை இரத்து: வெளியான அறிவிப்பு

0

மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்படுவதாக அஞ்சல் மா அதிபர் அறிவித்துள்ளார்.

தபால் ஊழியர்கள் (12} திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்திருந்தது.

விடுமுறை இரத்து

இந்நிலையில், இவ்வாறு விடுமுறை இரத்துச்செய்யப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், சுமார் 6000 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், 4 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை எனவும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்திருந்தனர்.

நுவரெலியா

தபால் ஊழியர்கள் நேற்று 12 நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இதற்கு ஆதரவாக நுவரெலியா பிரதான தபால் நிலைய ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊழியர்களை ​சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நுவரெலியா பிரதான தபால் நிலையத்தில் கடிதங்கள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றது.

இதேவேளை, கடிதம் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளமையால் அதிகமான கடிதங்கள் நுவரெலியா பிரதான தபால் நிலையத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தி – திவாகரன்

மன்னார்

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக
இன்றைய தினம் வியாழக்கிழமை(13) மன்னார் தபாலக ஊழியர்கள் சுகயீன விடுமுறை
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தபால் துறையில் நிலவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்ப
தவறியமை,உரிய பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
இன்றைய தினம் (13) போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்திற்கு அஞ்சல் அதிபர்கள் ஆதரவளிக்காத நிலையில் ஏனைய அஞ்சல்
அலுவலக சேவைகள் மன்னார் மாவட்ட அஞ்சல் திணைக்களத்தில் இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version