கற்பிட்டியில் (Kalpitiya) தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (14) கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட வேட்பாளரிடம் ஏற்கனவே 97,200 ரூபா பணம் இருந்ததுடன், அந்தப் பணத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தேர்தல் வன்முறைகள்
இதனடிப்படையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கற்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில், தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (DIG Nihal Thalduwa) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.