Home முக்கியச் செய்திகள் கோர விபத்துக்குள்ளான கொழும்பிலிருந்து பயணித்த கார் – பயணித்தவர்களின் நிலை

கோர விபத்துக்குள்ளான கொழும்பிலிருந்து பயணித்த கார் – பயணித்தவர்களின் நிலை

0

கார் ஒன்று வீதியை விட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.  

குறித்த விபத்து சம்பவம் இன்று களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் குருக்கள்மடம் முருகன்
ஆலயத்திற்கு முன்னால் விபத்துக்குள்ளகியுள்ளது.

விசாரணை

காரில் மூன்றுபேர் பயணித்துள்ள
நிலையில் அவர்கள் காயங்களுக்குள்ளாகி களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படாமல் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் காவல்துறையினர்
முன்னெடுத்து வருகின்றனர்.

அதிகளவான வளைவுகள்

வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகியதால் இச்சம்பவம்
நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் பகுதியில் அதிகளவான
வளைவுகள் காணப்படுவதாகவும், மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் காவல்துறையினர்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version