Home இலங்கை சமூகம் கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கோரிக்கை..

கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கோரிக்கை..

0

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை, அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால்
பாதிக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்காக அக்கறை செலுத்தும் ஆழமான ஆன்மீக உணர்வுடன்
கொண்டாட வேண்டும் என்று இலங்கையில் உள்ள கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் பேராயர்
கர்தினால் மல்கம் ரஞ்சித் ,இன்று(3) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு விசேட அறிக்கையில் இதனை தெரிவித்த அவர்,

“நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான
நமது சக குடிமக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள், சிலர்
அகதிகள் முகாம்களில் உள்ளனர்.

மல்கம் ரஞ்சித்தின் கோரிக்கை

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அணிந்திருந்த உடையைத் தவிர வேறு எந்த
உடைமைகளும் இன்றி தவிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் நாம் எப்படி ஆடம்பரமான வெளிப்படையான கொண்டாட்டங்களில்
ஈடுபட முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

எனவே, “இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் மகிழ்ச்சி, ஆடம்பரம் அல்லது தேவையற்ற வீண்
செலவுகளால் குறிக்கப்படும் கொண்டாட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு” தனது
விசுவாசிகள் அனைவருக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

“கிறிஸ்துமஸைக் கொண்டாடுங்கள், ஆனால் அதை ஆழமான ஆன்மீகச் சிந்தனைகளுடனும்,
தேவைப்படுபவர்கள் மீதான அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதன் மூலமும்
செய்யுங்கள்” என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

NO COMMENTS

Exit mobile version