நடிகர் கமல் ஹாசன் சினிமா ஒருபக்கம், அரசியல் ஒருபக்கம் என பிசியாக இருந்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளராக பல பெரிய படங்களை தயாரிக்கிறார்.
கமல் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா ஆசையை நிறைவேற்றிவிட்டேன்
இந்நிலையில் கமல் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தனது எம்பி பதவி பற்றி பேசி இருக்கிறார். “தான் 10ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தும்போது அவரது அம்மா சொன்ன விஷயம் தான் நினைவுக்கு வருவதாக கூறி இருக்கிறார்.”
படித்து அரசு வேலைக்கு போகவேண்டும் என விரும்பியதாக அம்மா கூடியதாகவும், அதை தற்போது 71 வயதில் நிறைவேற்றி இருப்பதாகவும் கமல் கூறி இருக்கிறார்.
