முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான்
பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கற்சிலைமடு பேராறுப் பகுதியில் அமைந்துள்ள
பாலம் தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக் காரணமாக
இன்றையதினம் (03) மாலை குறித்த பாலத்தில் திடீரென உடைவு ஏற்பட்டிருந்தது.
எனவே குறித்த வீதியால் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.
புனரமைப்பு
இந்தநிலையில்
குறித்த பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் ( RDD) வீதி அபிவிருத்தி
அதிகாரசபையினரோடு பொலிஸாரும் இணைந்து, தற்காலிகமாக வாகனங்கள் பயணிக்ககூடிய
வகையில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
