Home முக்கியச் செய்திகள் இலங்கையில் இது கூடவே கூடாது : கர்தினால் மல்கம் ரஞ்சித் கடும் எதிர்ப்பு

இலங்கையில் இது கூடவே கூடாது : கர்தினால் மல்கம் ரஞ்சித் கடும் எதிர்ப்பு

0

இலங்கையில்(sri lanka) ஒரே பாலின திருமணக் கருத்தை (same-sex marriage concept)கடுமையாக எதிர்க்கும் அதே வேளையில், பாரம்பரிய குடும்ப அலகைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் .

பேருவளை புனித அன்னாள் தேவாலயத்தில் பிரசங்கம் நிகழ்த்திய கர்தினால் மல்கம் ரஞ்சித், பல்வேறு பிரசாரங்கள் மற்றும் திருமணத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் தற்காலிக தீர்வுகளைத் தேடுவதால் புதிய தலைமுறை தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

இளம் தலைமுறையை தவறாக வழிநடத்த முயற்சி

இலங்கையர்கள் தற்போது உலகளாவிய போக்குகளால் பாதிக்கப்படுவதாகவும், இளைய தலைமுறையினரிடையே ஒரே பாலின திருமணத்தை ஊக்குவிப்பதில் சில அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.

ஒரு ஆணும் பெண்ணும் ஈடுபடாமல் ஒரு குடும்பத்தை கட்டியெழுப்ப முடியாது என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.

NO COMMENTS

Exit mobile version