Home இலங்கை அரசியல் வீதியில் இறங்குவோம்…! அநுர அரசை எச்சரிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

வீதியில் இறங்குவோம்…! அநுர அரசை எச்சரிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

0

எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி முன்பாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நாம் வீதியில் இறங்க பின்னிற்க மாட்டோம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.

2025 ஜூபிலி ஆண்டை முன்னிட்டு கொழும்பு (Colombo) மறை மாவட்ட மக்கள் தொடர்பு மத்திய நிலையத்தால் கொழும்பு பேராயர் இல்லத்தில் நடந்த விசேட கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள (Sri Lanka) அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே தற்போதைய ஆட்சியாளர்களை ஆட்சிப்பீடத்தில் ஏற்றினோம்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்

ஆனால், அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தாமலும் எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இருந்து வந்தால் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அத்துடன் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரதீப் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீய்த் நொயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலை நாட்டுவதற்கு தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள அரசாங்கம் இனியும் காலம் தாழ்த்தக் கூடாது.

இந்த விடயங்கள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் இரகசியமாக வைத்துக் கொள்ளாமல் எவருடனும் ‘டீல்’ போடாமல் உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என கர்தினால் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version