Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 60 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 60 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

0

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வேட்பாளர்களுக்கு
எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவித்
தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (9) இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்
தேர்தல் பங்கேற்கும் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு
கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செலவீனங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,  எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் தேர்தல் சட்டங்களை பின்பற்றி கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுத் தாக்கல் என்பவற்றை உரிய நேரத்திற்கு
முன்னெடுக்க வேண்டும்.

இதன்மூலம் தேர்தல் திணைக்களத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதன்
மூலம் அமைதியான தேர்தலை நடத்தி முடிக்க சகல தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்க
வேண்டும்.

அத்தோடு, தேர்தல் செலவீனங்கள் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் எஸ்.சுபியான் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version