Home முக்கியச் செய்திகள் ரணிலுக்கு பேரிடியான அறிவிப்பு! மேல்நீதிமன்றுக்கு மாற்றப்படும் வழக்கு

ரணிலுக்கு பேரிடியான அறிவிப்பு! மேல்நீதிமன்றுக்கு மாற்றப்படும் வழக்கு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த விவகாரம் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் நேற்று (19) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பயணத் தடை

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு மனு மூலம் விடுத்த கோரிக்கை இன்று பரிசீலிக்கப்பட்டபோது, ​​சட்டமா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இவற்றை நீதிமன்றுக்கு கூறியுள்ளார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணை விரைவாக முடிக்கப்படும் என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, தங்கள் கட்சிக்காரருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவதற்கான கோரிக்கையை மீளப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version