Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜுன் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்று (25) யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசன் இன்றும் நீதிமன்றத்தில் முன்னிலையாகததால், திருகோணமலையில் அவரது சரியான முகவரிக்கு மீண்டும் அழைப்பு கட்டளை அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழில் சீல் வைக்கப்பட்ட தொடருந்து நிலையம்: வெளியான காரணம்

வழக்கு ஒத்திவைப்பு

இதன்போது முதலாம் மற்றும் மூன்றாம் எதிராளிகள் தரப்பு சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைக்க கால அவகாசம் கோரினார்.

இதனையடுத்து எதிராளிகள் தமது சமர்ப்பணங்களை முன்வைக்க அவகாசம் வழங்கி ஜுன் 20ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

NO COMMENTS

Exit mobile version