Home முக்கியச் செய்திகள் யாழில் ஆலயம் ஒன்றில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

யாழில் ஆலயம் ஒன்றில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

0

யாழ்.(Jaffna) வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பிலிப்புநேரியார் ஆலயத்தில் காணிக்கை
உண்டியல் களவாடப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு(01.03.2025) இடம்பெற்றுள்ளது.

ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக இன்றையதினம்(02) சென்றிருந்த மக்கள் குறித்த காணிக்கை
உண்டியல் ஆலயத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவம்

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தை மற்றும் ஆலய அருட்பணிச் சபையினருக்கு
தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சமீப காலமாக இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version