Home சினிமா உலக கோப்பை வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி.. தளபதி விஜய் முதல் சமந்தா...

உலக கோப்பை வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி.. தளபதி விஜய் முதல் சமந்தா வரை பிரபலங்கள் வாழ்த்து மழை

0

உலக கோப்பை

13வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்ற நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு நுழைந்தன.

இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா, முதலில் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து, 298 ரன்களை குவித்தது. 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற மிகப்பெரிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

ரீ ரிலீஸில் பாகுபலி தி எபிக் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

45.3 ஓவர்களில் 246 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்தியா சாம்பியன்ஸ் பட்டம் வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி வெல்லும் முதல் உலகக்கோப்பை இதுவே ஆகும். ரசிகர்கள் நேற்று இரவில் இருந்து இதனை கொண்டாடி வருகிறார்கள்.

பிரபலங்கள் வாழ்த்து மழை

இந்த நிலையில், திரையுலக பிரபலங்களும், அரசியவாதிகளும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் இந்திய மகளிர் அணிக்கு தெரிவித்து வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version