Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் பொருளாதார நிலைமை: நாடாளுமன்றுக்கு அறிவித்த ஆளுநர்

இலங்கையின் பொருளாதார நிலைமை: நாடாளுமன்றுக்கு அறிவித்த ஆளுநர்

0

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) இன்று (4) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இலங்கையில் பணவீக்கம் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொள்கை வட்டி வீதத்தைக் குறைக்க முடிந்ததாகத் தெரிவித்த வீரசிங்க, மாற்று விகிதத்தை ஸ்திரப்படுத்துவதன் மூலம் ரூபாயை பலப்படுத்த முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி

மேலும், நாட்டின் நிதி அமைப்பை ஸ்திரப்படுத்துவது தொடர்பான விடயங்களையும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் வங்கி முறை வீழ்ச்சியடைவதை தடுக்க முடிந்தமை விசேட விடயம் என சுட்டிக்காட்டிய ஆளுநர், மத்திய வங்கி சட்டம் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் வங்கி அமைப்பு அதற்கு உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version