Home இலங்கை சமூகம் நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு

0

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் நியாயமற்ற வட்டி விகிதங்கள் குறித்து நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடம் புகாரளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பில் மேலும்,

வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி வங்கிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது.

முரண்பாடுகளை விசாரிக்க தலையிடும் அதிகாரம்

இருப்பினும், நியாயமற்ற வட்டி விகிதங்கள் வசூலிக்கப்பட்டால் முரண்பாடுகளை விசாரிக்க தலையிடும் அதிகாரம் எமக்கு உள்ளது.

அத்தகைய புகார்களை நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இலக்கமான “1935” இற்கு தெரிவிக்க முடியும்.

இலங்கை மத்திய வங்கி அவ்வப்போது வட்டி விகிதங்களை வெளியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version