Home இலங்கை பொருளாதாரம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

130,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல் ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/central-bank-special-announcement-1723335695

NO COMMENTS

Exit mobile version