Home இலங்கை பொருளாதாரம் அரசாங்கத்தின் புதிய எரிபொருள் ஒப்பந்தம்.. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி!

அரசாங்கத்தின் புதிய எரிபொருள் ஒப்பந்தம்.. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி!

0

அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியாக, எரிபொருள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயைச் சேர்ப்பது குறித்து அரசாங்கம் தற்போது ஆலோசித்து வருகிறது.

WTI – கச்சா எண்ணெய் 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது வளைகுடா பிராந்தியத்திலிருந்து இலங்கைக்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகவும், கூடுதலாக, அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட கச்சா எண்ணெய்க்கான டெண்டர் செயல்பாட்டில் இணைவது குறித்து தற்போது விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

அதன்படி, எண்ணெய் வகைகளில் எது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என்பது குறித்து விலைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version