Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

0

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.  

அரசாங்கத்தின் முடிவு 

இன்று (23) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்தக் கவனமும் செலுத்தவில்லை. திறக்கப்பட்டுள்ள சந்தை தொடர்ந்து திறந்திருக்கும். அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை.

எனக்குத் தெரிந்தவரை, வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் அறிக்கையில் அத்தகைய மாற்றத்தைச் செய்வார் என்று நான் நினைக்கவில்லை.

இது ஒரு இரத்து என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது” என நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version