Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை

இலங்கையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை

0

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இடம்பெற்று வரும் மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பரவி வரும் மோசடி விளம்பரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (CBSL) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை எனவும், பொய்யான தகவல்களை வழங்கி மக்களை ஏமாற்ற முயற்சிப்பவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி, சிறிய தொகையை முதலீடு செய்தால் பெரிய தொகையாக பணம் வழங்கப்படும் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், இத்தகைய போலி விளம்பரங்களை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் கருத்திற்கொள்ள வேண்டுமென பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version