Home இலங்கை அரசியல் பிணை முறி மோசடி விவகாரம்! ரவி கருணாநாயக்க வெளிப்படுத்திய தகவல்

பிணை முறி மோசடி விவகாரம்! ரவி கருணாநாயக்க வெளிப்படுத்திய தகவல்

0

தாம் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் மத்திய வங்கி தனது கண்காணிப்பில் இருந்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, முறிகள் மோசடி இடம்பெற்ற காலத்தில்  மத்திய வங்கி ரணிலின் கீழே இயங்கியது என்றும் வணிக வங்கிகள் பொது நிறுவனங்கள் அமைச்சர் கபீர் ஹாஷிமின் இலாகாவிற்குக் கீழ் இருந்தன என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி விசாரணை

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் விவாதங்களில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஜனாதிபதி விசாரணை ஆணைய அறிக்கை, எந்த வகையிலும் என்னை குற்றவாளியாகக் காணவில்லை.

 நான் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் என்ற உட்குறிப்பு முற்றிலும் தவறானது மற்றும் ஆணையத்தின் கண்டுபிடிப்புகளால் ஆதரிக்கப்படவில்லை.

பிணை முறி மோசடி 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விவகாரத்திற்கு பலமுறை பொறுப்பேற்றுள்ளார் என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தக்கூடிய முன்னாள் கோப் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தியின் சாட்சியத்தையும் அவர் மேற்கோள் காட்டினார்.

NO COMMENTS

Exit mobile version