Home முக்கியச் செய்திகள் மரணத்தின் பின்னரும் பட்டம் பெற்ற விமானி: கண்ணீர் மல்கிய மனைவி!

மரணத்தின் பின்னரும் பட்டம் பெற்ற விமானி: கண்ணீர் மல்கிய மனைவி!

0

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானியின் பட்டச் சான்றிதழ் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரால் இன்று (03.12.2025) அவருடைய பூதவுடலுக்கு சமர்பிக்கப்பட்டது.

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணத்துக்காக சென்றிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதில் விமானியாக இருந்த விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய உயிரிழந்தார்.

இறுதி அஞ்சலி

அவருடைய உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (03.12.2025) அவருடைய பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது.

மக்களுக்காக நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகி துரிதிஷ்டவசமாக அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவருக்குரிய பட்டச் சான்றிதழ் அவருடைய பூதவுடலுக்கு சமர்பிக்கப்பட்டது.

உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் 

அதன்படி, நாளைய தினம் (04.12.2025)  இறுதிக் கிரியைகள் முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெற்றவுள்ளன.

மேலும், அவரது சேவைகளைப் பாராட்டும் வகையில், நவம்பர் 30 ஆம் திகதி முதல் விங் கமாண்டர் பதவியில் இருந்து குரூப் கேப்டன் பதவிக்கு அவர் பதவி உயர்வு பெற்றார்.

தலைமை விமானி, 41 வயதான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய 3,000 மணி நேரத்திற்கும் மேலாக விமானப் பயணம் செய்த அனுபவம் வாய்ந்த விமானி என்றும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version