Home இலங்கை பொருளாதாரம் மத்திய வங்கியின் தங்க கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மத்திய வங்கியின் தங்க கையிருப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

இலங்கை மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) தங்க கையிருப்பு பெறுமதி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதத்தில் உலகளாவிய தங்க விலை வேகமாக அதிகரித்ததன் காரணமாகவே மத்திய வங்கியின் தங்க கையிருப்பு பெறுமதியும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் பெறுமதி கடந்த 2025 ஒக்டோபர் மாத இறுதியில் 6,216 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

மில்லியன் டொலர்கள்

இது 2025 செப்டம்பர் மாத இறுதியில் பதிவான உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களின் பெறுமதியான 6,244 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும்போது 0.4% ஆல் சரிந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையின் படி இது தெரியவந்துள்ளது.      

இந்த வீழ்ச்சிக்கு, உத்தியோகபூர்வ கையிருப்புச் சொத்துக்களில் உள்ள பிரதான அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு, 2025 ஒக்டோபர் மாதத்தில் 6,179 மில்லியன் டொலர்களிலிருந்து 6,100 மில்லியன் டொலர்கள் வரை 1.3% இனால் குறைவடைந்தமை பிரதான காரணமாகும்.

எனினும், 2025 ஒக்டோபர் மாதத்தில் மத்திய வங்கியின் தங்க கையிருப்பு 58 மில்லியன் டொலர்களிலிருந்து 80 மில்லியன் டொலர்கள் வரை, 36.6% இனால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். 

NO COMMENTS

Exit mobile version