Home இலங்கை அரசியல் வவுனியாவில் கூடவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு

வவுனியாவில் கூடவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் (vavuniya) நடைபெற ஏற்பாடாகியுள்ளது. 

குறித்த செயற்குழுக் கூட்டம் நாளை (18.04.2024) நடைபெறவுள்ள நிலையில், கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை
நிறுத்துவது தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sritharan) மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பொது வேட்பாளர் விடயத்தைச் சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும் என்ற
நிலைப்பாட்டில் உள்ளனர். 

தெருக்களில் இறங்கி கூச்சலிட்ட மக்கள்: இரு வருடங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் – மனுச நாணயக்கார தகவல்

உறுதியான முடிவு

கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா. சம்பந்தன் (Sampanthan), நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் (Sumanthiran), இரா.சாணக்கியன் (Shanakkiyan) மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இதுவரை தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.    

எனவே, தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்த உறுதியான முடிவும் இந்தக் கூட்டத்தில்
எட்டப்படவுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நாளை ஆரம்பம் : மனோ கருத்து

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு – செய்திகளின் தொகுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version