Home இலங்கை அரசியல் முதுகெலும்பிருந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் : அரசுக்கு சவால்

முதுகெலும்பிருந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் : அரசுக்கு சவால்

0

முதுகெலும்பு இருந்தால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பின்பு தேர்தலை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்திருக்க வேண்டும் என மக்கள் போராட்ட முண்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜிவ்காந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எத்தனையோ வகையில் தற்போதைய அரசாங்கத்திற்கு அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அறியப்படுத்தியுள்ளோம்.

இருப்பினும், இன்று வரை எவ்வித ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது ஒரு தேர்தலுக்காக பொய்யான வாக்குறுகளுடன் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

இந்தநிலையில், அவர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து விட்டு அவர்கள் தேர்தலில் களமிறங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.


https://www.youtube.com/embed/sXW_qUZwDRI

NO COMMENTS

Exit mobile version