Home இலங்கை அரசியல் இளம் பெண்ணுக்கு கிடைக்க இருந்த வெளிநாட்டுப் பயண வாய்ப்பு.. வசந்தவை கிண்டலடித்த சாமர சம்பத்!

இளம் பெண்ணுக்கு கிடைக்க இருந்த வெளிநாட்டுப் பயண வாய்ப்பு.. வசந்தவை கிண்டலடித்த சாமர சம்பத்!

0

அழகிய இளம் பெண்ணொருவருக்கு கிடைக்க இருந்த வெளிநாட்டுப் பயண வாய்ப்பை இல்லாமல் செய்த தவறைக் குறித்து தான் பெரிதும் மனம் வருந்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மனவருத்தம் தெரிவித்துள்ளார்.

வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்கவின் வெளிநாட்டுப் பயணம் ஒன்றைக் குறித்த தகவல்களை அண்மையில் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.

அதன் காரணமாக அமைச்சர் வசந்த சமரசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்படவிருந்த இளம் பெண்ணொருவருக்கு அதற்கான வாய்ப்பு தடைப்பட்டிருந்ததாக சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்

இணையத்தள செய்திச்சேவையொன்று வழங்கிய நேர்காணலில் அதற்காக மனவருத்தம் தெரிவித்துள்ள சாமர சம்பத் எம்.பி, எவ்வாறிருந்தபோதும் தான் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதுகுறித்த விசாரணைக்கு எந்தநேரத்திலும் குற்றப் புலனாய்வுத்திணைக்களத்துக்கு செல்வதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version