Home இலங்கை அரசியல் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்த சம்பிக்க ரணவக்க

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்த சம்பிக்க ரணவக்க

0

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தலைமையிலான ஐக்கிய குடியரசு
முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்துகொண்டது.

இது தொடர்பான அறிவிப்பு இன்றையதினம் (14.08.2024) வெளியாகியிருந்தது.

தலவத்துகொட கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்விலேயே சஜித் அணியினருடன் சம்பிக்க குழுவினர் இணைந்து கொண்டனர்.

றிஷாட் பதியூதீன்

இதேவேளை, இன்று சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியூதீன் அறிவித்திருந்தார்.

கட்சியின் உயர்பீடம் கூடி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

NO COMMENTS

Exit mobile version