Home இலங்கை அரசியல் சி.வி.கே சிவஞானம்தான் தமிழரசுக் கட்சியின் தலைவர் : அடித்துக் கூறும் சாணக்கியன்

சி.வி.கே சிவஞானம்தான் தமிழரசுக் கட்சியின் தலைவர் : அடித்துக் கூறும் சாணக்கியன்

0

பதில் தலைவரென மற்றும் புதிய தலைவர் என கூறினாலும் சி.வி.கே சிவஞானமே தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (29) மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டமை குழப்பகரமான செயற்பாடு அல்ல இது குழப்பத்தை தவிர்த்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு.

இதனுடன், கட்சி யாப்பை மீறி கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களை நீக்குவதற்கு கட்சியில் இடம் இருக்கின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கட்சிக்கு முரணாக செயற்பட்ட அரியநேத்திரன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதனை ஒரு குழப்படிமன யாரும் கூற முடியாது, இது கட்சியை கட்சியை சுத்தப்படுத்தும் ஒரு செயற்பாடாகும்.

வைத்தியர் சிவமோகன், நாடாளுமன்ற தேர்தலின் போது கட்சியின் வேட்பாளருக்கு எதிராக பல போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, கட்சிகை்கு பின்ணடைவாக செயற்பட்டவர்.

இந்தநிலையில், இது தெடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாடுகளை வைத்து விசாரணை நடத்தப்படும் வரை அவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார், இதில் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை.

ஒரு சில கோமாளி ஊடகங்கள் ஒரு சில கோமாளிகளை வைத்துகொண்டு, தமிழரசுக்கட்சிக்குள் குழப்பம் இருப்பது போல சமூக வலைதளங்களில் காட்டுவதால்தான் கட்சியில் குழப்பம் இருப்பது போல மக்களுக்கு வெளியில் தெரிகின்றது” என அவரை் தெரிவித்துள்ளார். 

https://www.youtube.com/embed/LsiIqxEArMc

NO COMMENTS

Exit mobile version