Home இலங்கை அரசியல் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் போது துணையாக நின்றுள்ளேன்: சாணக்கியன் விளக்கம்

தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் போது துணையாக நின்றுள்ளேன்: சாணக்கியன் விளக்கம்

0

அபிவிருத்தியை காட்டி அமைச்சர்களாக மட்டக்களப்பில் இருவர் வலம் வந்தபோதிலும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின்போது அவர்களுடன்
நின்று தீர்வினைப் பெறுவதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்தேன் என தமிழ் தேசிய
கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு –  களுவாஞ்சிகுடியில் நேற்று(01.10.2024)மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

ஆரம்ப வேலைகள்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பத்தாவது நாடாளுமன்றம் கூடுவதற்கான தேர்தல்
நடைபெறுவதற்கான ஆரம்ப வேலைகளை தற்போது அனைத்து கட்சியினரும்
முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய மத்திய
செயற்குழு வவுனியாவிலே ஒன்றுகூடி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

அந்தத்
தீர்மானங்களுக்கமைவாக எதிர்வரும் தேர்தலிலே இலங்கை தமிழரசுக்
கட்சி வீட்டுச் சின்னத்திலே போட்டியிடுவதென்பது ஒரு தீர்மானமாக
எடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வருமாறு
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கும் நாங்கள்
அழைப்பு விடுத்திருக்கின்றோம்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version