Home இலங்கை அரசியல் பொறுப்புகூறலை கண்டுகொள்ளாத அரசு : சபையில் சாணக்கியன் எம்.பி முழக்கம்

பொறுப்புகூறலை கண்டுகொள்ளாத அரசு : சபையில் சாணக்கியன் எம்.பி முழக்கம்

0

தமிழ் மக்களுக்கான பொறுப்புகூறல் தொடர்பில் இதுவறை எவ்வித தகவலும் அரசாங்கத்திடமிருந்து முறையாக கிடைக்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (shanakiyan Rasamanickam) கடுமையாக சாடியுள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (27) நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த அரசாங்கத்திற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் என்ன வித்தியாசம் பெரிதாகவுள்து, கடந்த அரசாங்கம் போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றது.

தற்போதைய அரசாங்கமானது புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்குமா அல்லது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசவின் பெயரை மட்டும் அரசியலமைப்பில் இட்டு மாற்றுமா ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், பயங்கரவாத தடைச்சட்டம், தமிழ் மக்களுக்கான பொறுப்புகூறல், வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என்பவை தொடர்பில் அவர் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/HT-Q7ArZjt4

NO COMMENTS

Exit mobile version