Home இலங்கை அரசியல் பேராசிரியர் பட்டம் வேண்டாம்: அமைச்சருக்கு சென்ற முக்கிய அறிவிப்பு

பேராசிரியர் பட்டம் வேண்டாம்: அமைச்சருக்கு சென்ற முக்கிய அறிவிப்பு

0

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவிற்கு (Chandana Abeyratne), தனது பெயருக்கு முன்னால் “பேராசிரியர்” என்ற பட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எழுத்துப்பூர்வ அறிவிப்பு  

இந்த உத்தரவு, அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் (நிர்வாகம்) மூலம் அமைச்சின் துறைத் தலைவர்களுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அபேரத்ன தற்போது எந்தவொரு பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

எனவே, அவரது பெயருக்கு முன்னால் “பேராசிரியர்” என்ற பட்டத்தைப் பயன்படுத்துவது இனி பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version