Home இலங்கை அரசியல் புதிய ஜனாதிபதிக்கு சந்திரிக்காவின் செய்தி

புதிய ஜனாதிபதிக்கு சந்திரிக்காவின் செய்தி

0

புதிய ஜனாதிபதியாக இன்று நியமிக்கப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வாழ்த்து

இந்த விடயம் தொடர்பில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

   

அதில், சமூக, பொருளாதார, அரசியல் போன்றே ஜனநாயக ஆட்சி தொடர்பிலும் இந்த நாடு சவால்களை எதிர்நோக்கி வரும் சந்தர்ப்பத்தில் நாட்டை கட்டியெழுப்பி, மக்கள் வேண்டும் மாற்றங்களைச் செய்யக்கூடிய ஆற்றல் அநுரகுமாரவிற்கு கிடைக்க பிரார்த்தனை செய்வதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version