முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Kumaratunga) காலமானதாக சமூக வலைதளங்களில் தொடர் செய்திகள் பரவி வருகின்றது.
இந்தநிலையில், குறித்த செய்திகள் செய்திகள் உத்தியோகபூர்வமற்றதுடன் போலியானவை என தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலாக முகப்புத்தங்களில் எவ்வித உத்தயோகப்பூர்வ செய்தியும் அற்ற நிலையில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
போலியான தகவல்
இது தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள சிரேஸ்ட ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பிய நிலையில் இது போலியான தகவல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், இவ்வாறான போலியான செய்திகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாரு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
