Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா யாருக்கு ஆதரவு..!

ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா யாருக்கு ஆதரவு..!

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு வேட்பாளர்களுக்கு தான் ஆதரவளிக்கப்போவதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (chandrika bandaranake kumaratunga) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடுநிலை வகிக்க தீர்மானம்

தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் தன்னிடம் ஆதரவு கோரிய போதும், அதனை நிராகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தலில் யாருக்கும் ஆதரவின்றி நடுநிலை வகிக்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாார்.  

Source: https://ibctamil.com/article/chandrika-support-in-the-presidential-election-1725488967

NO COMMENTS

Exit mobile version